'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு மருத்துவ இடங்கள் கனவாக மாறி உள்ளன. தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என,
அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை, சில தினங்களுக்கு முன்,
அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், 'மருத்துவப் படிப்பில், தமிழக அரசுக்கான ஒதுக்கீட்டில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும், உள் ஒதுக்கீடு வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாணைப்படி பார்த்தால், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது. ஆனால், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், தனியார் பள்ளி மாணவர்களே அதிகம். அரசு பள்ளி மாணவர்கள் சிலர் தகுதி பெற்றாலும், அதிக மதிப்பெண் எடுக்கவில்லை. எனவே, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவு தகரும் என்பதோடு, இனி, பிளஸ் 2 பாடங்களுக்கு, மாணவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் குறையும்.தமிழகத்தில், 4.20 லட்சம் உயிரியல் படித்த மாணவர்களில், 88 ஆயிரம் பேர் மட்டுமே, 'நீட்' தேர்வை எழுதி உள்ளனர். தேர்வு எழுதாத, 3.30 லட்சம் பேரில், 90 சதவீதம் பேர், அரசு பள்ளி மாணவர்கள்.
No comments:
Post a Comment