தமிழகத்தில், பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், உள் ஒதுக்கீட்டு முறையிலாவது, ஜே.இ.இ., மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 53 கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பு உள்ளது. இவற்றில், 2,720 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில், 2,009 பேர் மட்டுமே, 'நாட்டா' என்ற தேசிய அளவிலான, ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். பி.ஆர்க்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 1,000 இடங்கள் வரை காலியாகும் என்பதால், ஜே.இ.இ., என்ற, மத்திய அரசின் நுழைவு தேர்வில், பி.ஆர்க்., தகுதி மதிப்பெண் பெற்றவர்களும், இந்த ஆண்டு, பி.ஆர்க்., படிப்பில் சேரலாம் என, சலுகை தரப்பட்டுள்ளது.
ஆனால், பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 'நாட்டா' தேர்வு மட்டுமே தகுதி என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜே.இ.இ., தேர்ச்சி பெற்றவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரலாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில், 5 லட்சம் ரூபாய் வரை நன்கொடை தேவை என்பதால், பல மாணவர்கள் தகுதி இருந்தும், பி.ஆர்க்., சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: ஜே.இ.இ., தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த பல பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, தமிழக அரசு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கிறது. இதில், சிக்கல் இருந்தால், 'நீட்' தேர்வின்படி, மருத்துவ சேர்க்கையில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது போல், பி.ஆர்க்., படிப்பில், ஜே.இ.இ., மாணவர்களுக்கும், உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது குறித்து, சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் ; பி.ஆர்க்., படிப்புக்கு, ஜூன், 25ல், barch.tnea.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப பதிவு துவங்கியது. ஜூலை, 6 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. ஜே.இ.இ., மதிப்பெண்ணை தகுதியாக ஏற்க வேண்டிய பிரச்னை உள்ளதால், விண்ணப்ப பதிவுக்கு கூடுதல்
அவகாசம் வழங்க, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment