சென்னை: 'சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பென்ஷன் வழங்க வேண்டும்' என, மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில், தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், மேற்பார்வையாளர் சங்கத்தின், ஐந்தாவது மாநில மாநாடு, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர், சங்கர்பாபு கூறியதாவது: சத்துணவு திட்டத்தில், 25 ஆண்டுகளாக பணியாற்றியோர், பதவி உயர்வில், ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்களாக பணியில் நியமிக்கப்பட்டோம். ஆனால், எங்களுக்கு பென்ஷன் பெற தகுதி இல்லை என, கூறுகின்றனர். 'சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சத்துணவு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, பென்ஷன் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment