பள்ளிச் சீருடைகளை தரமானதாக தைத்து வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார்.
சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில், திருவண்ணாமலை
மாவட்டத்தில் உள்ள 2 மகளிர் தையல் கூட்டுறவுச் சங்கங்களில் தமிழக அரசு
வழங்கும் இலவச பள்ளிச் சீருடைகள் தைக்கப்படுகின்றன. இங்கு தைக்கப்பட்ட
சீருடைகள் 2015-16ஆம் ஆண்டில் முதல்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரு இணை விலையில்லா சீருடைகள் மே 30-ஆம்
தேதிக்குள் தைத்து வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, மாணவ, மாணவிகளுக்கு ஒரு இணை சீருடை
வீதம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 379 செட் இணை சீருடைகள் இதுவரை தைத்து
வழங்கப்பட்டுள்ளன.
இப்போது, மூன்றாம் கட்டமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான சீருடைகள் தைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இந்தப் பணியில் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு
குடிசை கூட்டுறவு சங்கத்தில் 1,600 உறுப்பினர்கள், வந்தவாசி அன்னை சத்யா
தையல் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் 1,100 உறுப்பினர்களும்
ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தைக்கப்படும் சீருடைகள் தரமானதாக
உள்ளதா? என்பதை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது, சீருடைகள் தரமானதாக தைத்து வழங்கப்பட வேண்டும் என்று
அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் செ.உமையாள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்
No comments:
Post a Comment