இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், வரும் 15ம் தேதிக்குள் மாணவர்
சேர்க்கை நடத்தப்பட வேண்டும்; எனினும், இந்திய மருத்துவக் கவுன்சிலான -
எம்.சி.ஐ., அனுமதி தராததால், மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
தமிழகத்தில்,
சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 11 நகரங்களில், இ.எஸ்.ஐ., மருத்துவக்
கல்லுாரிகள் உள்ளன. நிதிச் சுமை காரணமாக, இந்தக் கல்லுாரிகளை மூடும்
முடிவுக்கு, இ.எஸ்.ஐ., நிர்வாகம் வந்தது.ஆனால், இதற்கு எதிராக, நாடு
முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், கல்லுாரிகளை மூடும் முடிவை
மாற்றிய, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், 'வழக்கம் போல் மாணவர் சேர்க்கை நடக்கும்'
என, அறிவித்தது. இது தொடர்பாக, கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
இருப்பினும்,
நடப்பு ஆண்டில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களைச் சேர்க்க,
இதுவரை, எம்.சி.ஐ., அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில், மருத்துவப்
படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது; இதில், சென்னை
கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியின், 65 இடங்கள்
சேர்க்கப்படவில்லை. வரும், 15ம் தேதிக்குள், எம்.சி.ஐ., அனுமதி அளித்தால்
மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்த முடியும்.
''இ.எஸ்.ஐ.,
மருத்துவக் கல்லுாரிகளுக்கு, விரைவில், எம்.சி.ஐ., அனுமதி வழங்கும். அதன்
பின், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகள் தங்களுக்குள்
பேசி முடிவு எடுக்கும்
வரை, இ.எஸ்.ஐ., நிர்வாகமே கல்லுாரிகளை நடத்தும்.அதிகாரிகள்,
இ.எஸ்.ஐ., இயக்குனரகம்
No comments:
Post a Comment