தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில், 534 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரத்துடன், இந்த கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இம்மாதம் 1ம் தேதி முதல், பொதுப் பிரிவு கவுன்சிலிங் துவங்கியது. 2.05 லட்சம் இடங்களுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. துவக்க நாள் முதலே, கவுன்சிலிங்கில் பங்கேற்கும், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ, மாணவியரை பொறுத்தவரை, பி.இ., - பி.டெக்., படிப்புகளில், தாங்கள் விரும்பிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளையே தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மெக்கானிக்கல் பிரிவு தான், அதிக அளவில், மாணவர்களால் எடுக்கப்படும்.ஆனால், இந்த ஆண்டு, எலக்ட்ரானிக் மற்றும்கம்யூனிகேஷன் - இ.சி.இ., படிப்பை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். அடுத்தபடியாக, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.மாணவியரை பொறுத்தவரை, இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் படிப்புகளை, பெரும்பாலும் தேர்வு செய்துஉள்ளனர்.
அனுமதி:
அண்ணா பல்கலையில் உள்ள சுரங்கவியல் படிப்புக்கு, இந்த ஆண்டு முதல், மாணவியரை சேர்க்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாணவி கூட சேரவில்லை.இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்த, 1.54 லட்சம் பேரில், நேற்று வரை, 1.25 லட்சம் பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 36 ஆயிரம் பேர், கவுன்சிலிங்கை புறக்கணித்துள்ளனர். பங்கேற்றவர்களில், 450 பேர், விரும்பிய பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள்
விளையாட்டு பிரிவு :
ஒவ்வொரு ஆண்டும், இந்த கல்லூரிகளில் உள்ள, இரண்டு லட்சம் இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை நடத்துகிறது. இந்த ஆண்டு, முதல் கட்டமாக, விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்கிடைக்காததால், இடங்களை திருப்பிக் கொடுத்து விட்டனர். இவர்கள் போக, 88 ஆயிரம் பேர், கல்லூரிகளில் சேர, 'சீட்' பெற்றுள்ளனர். பொது கவுன்சிலிங், நாளை வரை நடக்க உள்ளது. 29ம் தேதி மற்றும் 30ம் தேதி, தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இந்த ஆண்டில், மொத்தமுள்ள, 2.05 லட்சம் இடங்களில், ஒரு லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வெளிமாநில மாணவர் கவுன்சிலிங் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கு தனித்தனியாக தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை விரும்பும் மாணவர்கள்:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளையே, அதிகம் தேர்வு செய்துள்ளனர்.சென்னையைச் சுற்றி, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், வளாகத் தேர்வு மூலம், படிப்பு முடிக்கும் போது, வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த முறையை கையாண்டுள்ளனர். பிற மாவட்டங்களில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கு மட்டுமே, மாணவ, மாணவியர் முன்னுரிமை அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment