ஊட்டி:'கல்வி உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்' என, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்தார்.
'மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா' என்று, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில், ஆய்வு நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்ட பள்ளிகளில், ஆணைய தலைவர் சரஸ்வதி, செயலர் சரவணகுமார் நேற்று ஆய்வு நடத்தினர்.
பின், சரஸ்வதி கூறியதாவது:கல்வி உரிமைச் சட்டம் குறித்து பள்ளிகள், பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; விளம்பரங்கள் செய்து, மாணவர் சேர்க்கையை முழுமைப்படுத்த வேண்டும். இவ்வாறு சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, கல்வி வழங்குவதில் கல்வி நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சட்டப்படி, நவம்பர் வரை பள்ளிகளில் சேர்க்கை வழங்குவதற்கு கால நீடிப்பு தரப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்ட சேர்க்கைக்காக, பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு சரஸ்வதி கூறினார்.
No comments:
Post a Comment