சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தை, முதல் அமைச்சராக நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பாண்டியராஜன் கூறியதாவது:
அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். மேலும் பல அமைச்சர்கள் இங்கு வருவார்கள். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் இங்கு வருவார்கள். பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கும் திமுகவுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.
பன்னீர் தலைமையில் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும். பிளவு ஏற்படக்கூடாது என்பது அனைவரின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment