திருவள்ளூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி சனிக்கிழமை முதல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளன. இதற்காக விடைத்தாள்கள் கடந்த மூன்று நாள்களுக்கு முன் அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதில், மாணவர்களின் புகைப்படங்கள், பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய முகப்பு தாள், முதன்மை விடைத்தாள் கூடுதல் தாள்கள் ஆகியவற்றை இணைத்து தைக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், 102 மையங்களில் தலைமை ஆசிரியர்களின் பொறுப்பில் அனுபவம் மிக்க தையலர்களைக் கொண்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ், ஆங்கிலத் தேர்வுக்கு மட்டும், 30 பக்கம் கொண்ட கோடிட்ட விடைத்தாள்களும், விலங்கியல், தாவரவியல் பாடத்துக்கு தனித்தனியாக தலா 22 பக்கமும், கணக்கு பதிவியலுக்கு, 14 பக்கம் கோடிடப்படாத தாள், 15 முதல் 46 பக்கம் அக்கவுண்ட் பேப்பரும், கணினி அறிவியல் தேர்வுக்கு, 30 பக்கமும், பிற தேர்வுகளுக்கு தலா 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களும் தைக்கப்பட்டு
வருகின்றன.
வரலாறு பாடத்தில், நடுவில் உலக வரை படமும், அதேபோல் கணிதப் பாடத்துக்கு வரைபடத் தாள்களும் இணைத்து தைக்கப்பட்டு உள்ளன. பொதுத் தேர்வுக்கு சில நாள்களே உள்ள நிலையில் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment