எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான மையத்தை இணையதளம் மூலமாக அறியலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் தொழிற்நுட்பப் பணியிடங்களுக்கு, சென்னையில் சனிக்கிழமை (ஜன. 9) நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் கிடைக்கப் பெறாதவர்கள், இத்துறையின் http:www.stationeryprinting. tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பதாரருக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிய தேர்வு மையத்தை அறிந்து கொண்டு, தேர்வு மையத்துக்கு தங்களது ஆளறி அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப நகலுடன் சென்று தேர்வு எழுதலாம் மேலும் விவரங்களுக்கு:
044-28543334, 28543335, 2854337, 28520038, 28520039, 28520040 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment