தமிழக அரசு கல்லுாரிகளில் போட்டி தேர்வு இல்லாமல், தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 8,000 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு தனித்தனியே, இரண்டு, 'ஷிப்டு'களாக, 3,300 கவுரவ பேராசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும், ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விளம்பரம், அறிவிப்பு இல்லாமல், கல்லுாரிகளில் கூடுதலாக, தற்காலிக பேராசிரியர் நியமிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:ஏற்கனவே, 3,300 பேர், கவுரவ பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் தவிர, ஆயிரக்கணக்கானோர், 'நெட், ஸ்லெட்' தேர்வுகள் முடித்து, பேராசிரியர் பதவிக்காக
காத்திருக்கின்றனர்.ஆனால், அரசின் எந்த அறிவிப்பும் இல்லாமல், நியமன விதிகளை பின்பற்றாமல், மீண்டும் தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதில், அரசியல்வாதிகளுக்கு வேண்டியோர் பலர், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலோ, போட்டி தேர்வோ இல்லாமல் பணி நியமனம் செய்யக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாமல் பேராசிரியர்களை நியமிப்பதால், பட்டதாரிகள், ஆசிரியர்களிடம் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment