தமிழகத்தில் செவிலியர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் உள்ள 23 செவிலிய பட்டயப் படிப்புக்கான கல்வி நிறுவனங்களில் நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 22-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 9 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
விண்ணப்ப விநியோகத்துக்கு கடைசி நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மொத்தம் 10,487 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஆக. 4) கடைசியாகும். விண்ணப்பங்களை "செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment