நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையால் தொடக்கக் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. அதனால் இந்தக் கொள்கை விரைவில் ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம்சங்கர் கத்தாரியா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

கிராமப்புற அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்காதது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது, நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற காரணங்களால்தான் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.
இந்தக் கொள்கையை ரத்து செய்தால் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
எனவே, இந்தக் கொள்கையை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment