பெரம்பலூர் மாவட்டத்தில் சுயநிதி, மெட்ரிக்
பள்ளிகளில் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ)
ப. மதுசூதன் ரெட்டி.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுயநிதி மற்றும்
மெட்ரிக் பள்ளிகளில், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்
மாணவர் சேர்க்கை குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை
நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் பேசியது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து சுயநிதி மற்றும் மெட்ரிக்
பள்ளிகளிலும்,மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பின்பற்றி
மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இந்தச் சட்டத்தின்படி, சுயநிதி மற்றும்
மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதா என்பதை கண்காணிக்க
ஜூலை 1ஆம் தேதி முதல் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும்.
அரசு விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்டக்
கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இரா.
எலிசபெத், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் வசந்தா ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
No comments:
Post a Comment