"சமுதாயம் பாராட்டும் வகையில்
ஆசிரியர்களின் பணி சிறப்பாக இருக்க வேண்டும்; சிறந்த மாணவர்களை உருவாக்க
வேண்டும்' என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன்
அறிவுறுத்தினார்.
அரசு தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும்
வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி
செய்யும் அறிவியல் ஆசிரியர்களுக்கு 3 தினங்கள் சிறப்புப் பயிற்சி
அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் நடைபெறும்
இப்பயிற்சி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.
பயிற்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் பேசியதாவது:
மாணவர்களை முழுமையாக ஆயத்தப்படுத்தும் வகையில்
ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும். ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால்தான்
சமுதாயம் உங்களை பாராட்டும். மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் வெளிக்கொணர
வேண்டும். சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு,
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார்
ஆகியோர் கற்பித்தல்குறித்து பயிற்சி அளித்தனர். அறிவியல் மைய கல்வி அலுவலர்
பி. மாரிலெனின் வரவேற்றார். என். பொன்னரசன் நன்றி கூறினார்.
ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை அறிவியல் மாதிரிகளை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment