*கிராமப்புறங்களில், 4.6 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். 3.49 சதவீத எஸ்.சி., பிரிவினரும், 3.35 சதவீத எஸ்.டி., பிரிவினரும் வரி செலுத்துகின்றனர்.
* நாடு முழுவதும், 24.39 கோடி வீடுகள் உள்ளன. அவற்றில், 17.91 கோடி வீடுகள், கிராமப்புறங்களில் உள்ளன.
* கிராமப்புறங்களில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 30 சதவீதம் பேர் உள்ளனர். பஞ்சாபில்,
அதிகபட்சமாக, 36.74 சதவீதம், மேற்கு வங்கத்தில், 28.45, தமிழகத்தில், 25.55 சதவீதம் பேர் உள்ளனர்.
* கிராமப்புற மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் கல்வியறிவு இல்லாதவர்கள். கிராமப்புற மக்கள்தொகையில், 64 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.
* மொபைல் போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ள மாநிலமாக, உ.பி., விளங்குகிறது. 86 சதவீத வீடுகளில், மொபைல் போன் உள்ளது. அதையடுத்து, உத்தரகண்ட், சிக்கிம் மாநிலங்கள் உள்ளன. இந்த வரிசையில் கடைசியில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது.
* மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமை, வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, கம்யூனிஸ்ட் ஆளும், திரிபுராவில் உள்ளது. இந்த கொடுமை, தமிழகம் உட்பட ஒன்பது மாநிலங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment