அன்றாட வாழ்வில் அறிவியல்-219
வெயிலிலிருந்து நிழலுக்கு வரும்போது கண்களுக்கு இருட்டாக தெரிவது ஏன் ?
கண்கள் மிக நுணுக்கமான பணிகளைச் செய்கின்றன. ஒளியானது அலைகளாகத் தான் பரவுகிறது என்று நாம் அறிவோம். கண்ணில் கருவிழி என்று நாம் அழைக்கும் பகுதி உண்மையில் நிற மற்ற கார்னியா என்பதாகும். அதற்கு உட்புறம் ஐரிஸ் என்னும் மெல்லிய சதைதான் கருப்பாக இருக்கும். அதன் நிறம்தான் வெளியே கருவிழியாகத் தெரிகிறது. அந்த ஐரிஸ் என்பது நடுவில் ஒரு துளையுடனும் சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்கும்.
அந்தத் துளைதான் பாவை ஆகும். அதை ஒட்டி லென்ஸ் இருக்கும். பாவை வழியாக உள்ளே செல்லும் ஒளி அலைகள் லென்ஸின் வழியாக ஒளிவிலகல் அடைந்து கண்ணின் கடைசிப் பாகமான விழித்திரையில் விழுகின்றன.
அங்கிருக்கும் நரம்புகளானது அந்த விளைவை மூளைக்குத் தெரிவிக்க, மூளை அதை உணரும் நாம் பார்க்கும் விஷயம் என்னவென்று நமக்குத் தெரியும். வெயிலில் அதிக வெளிச்சம் இருக்கும் போது அதிக ஒளி அலைகள் வரும். அவ்வாறு அதிகமாக வரும் போது ஐரிஸ் விரிந்து பாவையை சுருங்க வைக்கும். நிழலுக்கு அல்லது வெளிச்சம் குறைவான பகுதிக்கு வரும்போது ஐரிஸ் சுருங்கி பாவையை விரிய வைக்கும் அவ்வாறு கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.
திடீரென்று வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கோ, வெயிலில் இருந்து நிழலுக்கோ வரும்போது ஐரிஸ் விரிய எடுத்துக் கொள்ளும் ஒரு கணம் ஒளி போதாததால் லேசாக இருட்டாக தெரியும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம்
No comments:
Post a Comment