சென்னை, ஆக. 16-'நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி கிடையாது' என, கே.வி., மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல நுழைவு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக, இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முக்கியமானவை.இதற்காக, நாடு முழுவதும், சிறப்பு பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பெரும்பாலான பள்ளிகளில், தனியார், 'கோச்சிங்' மையங்களுடன் ஒப்பந்தம் செய்து, பள்ளியிலேயே சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மாணவர் சேர்க்கையின் போதே, 'பேக்கேஜ்' என்ற முறையில், சிறப்பு பயிற்சிக்கும் சேர்த்து, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
'பயிற்சி வகுப்பு தேவையில்லை' என்று, மாணவர்கள் கூறினாலும், அதற்கு பள்ளிகள் ஒப்புக் கொள்வதில்லை.பயிற்சி வகுப்பில் சேராவிட்டாலும், சிறப்பு பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என, பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன.
இது குறித்து, பெற்றோர் தரப்பில், சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு, நிறைய புகார்கள் அனுப்பப்பட்டன.சி.பி.எஸ்.இ., நிர்வாகம் விசாரணை நடத்தி, பயிற்சி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடி பள்ளிகளான, கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்துக்கும், இந்த தடை உத்தரவு பொருந்தும் என, கூறப்பட்டுள்ளது.எந்த பள்ளியாவது, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தியதாக புகார் வந்தால், அந்த பள்ளியின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply
ReplyDeleteNow!,For more info Email: healthc976@gmail.com
Call or whatsapp +91 9945317569