
டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்’, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறுகிற மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராக பணியாற்றுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு 2016-ம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட சூழலில், தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கெடு முடிந்துவிட்டது. தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டவாரியாகதனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் பணியில் நீடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.இதுதவிர, அரசுப் பள்ளிகளில் சுமார் 500 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து இத்துறையைச் சார்ந்தவர்கள் கூறியதாவது:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன்: கல்வி உரிமை சட்டப்படி ஆண்டுக்கு 2 முறை என 8 ஆண்டுகளில் 16 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 4 முறை மட்டுமே நடந்ததால், பல ஆசிரியர் களால் தேர்ச்சிபெற முடியவில்லை. கடைசியாக 2017-ல் டெட் தேர்வு நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டெட் அறிவிப்பை தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, ஆசிரியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதால் அவர்களது குடும்பங்கள் மன உளைச்சலில் தவிக்கின்றன. எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்.
கருணை அடிப்படையில் விலக்கு
தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார்: உயர் நீதிமன்ற அறிவிப்பால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் வேலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற, ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.பல ஆசிரியர்கள் பள்ளிகளில் பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பல மாணவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளனர். வகுப்பறையில் அவர்கள் ஒரே பாடத்தை நடத்திவிட்டு, தகுதித் தேர்வில் அனைத்து பாடங்களையும் எழுதும்போது சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதை மனதில் வைத்தும், ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் கருணை அடிப்படையில் டெட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்கவேண்டும். விரைவில் நடக்கவுள்ள டெட் தேர்வுவரையேனும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றனர்.
தண்ணீர் முதல் மாமிசம் வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க... உடலில் எந்த பிரச்சனையும் வராது...!
ReplyDelete*தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யலாம்* என்று உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம்,
ReplyDelete*31 மாவட்ட நீதிபதி* தேர்வில்,
*ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம்* பெற்ற வழக்குரைஞர்கள்,
*நீதிபதிக்கான தேர்வை எழுதலாம்* என்று உத்தரவிட்டதன் பேரில் ,
3,562 பேர் தேர்வு எழுதினர்.
அதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
தற்போது நீதிமன்றமானது *ஏழு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வழக்குறைஞர்களில் ஒருவர்கூட நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெறாதது வருந்தத்தக்க விஷயம்*
எனவே அந்த *3,562 பேரையும் வழக்குரைஞர் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாமே*, இதையே நீதிமன்றம் செய்யவில்லை. *ஊருக்குதான் உபதேசம் தனக்கு இல்லையோ*.......
Please give exemption to working teachers
DeleteRTE act 2010 அடிப்படையில் நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள்: தீீர்ப்பு நடைமுறையில் முரண்பாடு
ReplyDeleteRTE act 2010 அடிப்படையில் நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள்: தீீர்ப்பு நடைமுறையில் முரண்பாடு
கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் RTE சட்ட அமலாக்கம் பெற்று 23/08/2010 ல் மத்திய அரசு வெளியிட்டது.
இதனை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே ஆரம்பத்தில் ஏற்று அமலாக்கங்கள் அந்தந்த மாநிலங்களில் அரசாணைகளாக வெளியிட்டன.
தமிழகத்தில் 15/11/2011 ல் அரசாணை எண் 181 வடிவில் RTE சட்டம் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவந்தது .
இதில் ஆசிரியர் நியமனங்கள் குறித்த விளக்கம் RTE சட்ட அமலாக்கம் மத்திய அரசு தேதியையே சாரும் என குறிப்பிடப்பட்டது.
அதாவது 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவருக்கும் TNTET கட்டாயம் என்ற நிபந்தனை வட்டத்தில் கொண்டு வரப்பட்டனர்.
இந்த நிபந்தனை முன் தேதியிட்டு 16/11/2012 ல் தான் TET கட்டாயம் என்ற அறிவிப்பு கல்வி இயக்குனர் மூலம் வெளிவந்தது.
16/11/12 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு TET கட்டாயம் என்பதை முறைப்படி அறிவிக்கவில்லை.
ஆயினும்...
RTE அடிப்படையில்
முழுமையான திரட்டு கூறுவது யாதெனில்....
1) ஒருவர் 23/08/2010 க்கு பிறகு புதிதாக பட்டதாரி ஆசிரியர் பணியில் அல்லது இடைநிலை ஆசிரியர் பணியில் ( அரசு ) சேர்ந்தாலோ,
2) 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் அல்லாத அரசு பணியிடத்தில் இருந்து ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்றாலோ,
3) 23/08/2010 க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ ...
4) 23/08/2010 க்குப் பிறகு சத்துணவு பணியில் இருந்து பயின்று இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ...
5) சிறுபான்மையினர் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ( TET வழக்கு இன்னும் மேல்முறையீீட்டு ( Supreme Court ) வழக்கு நிலுவையில் உள்ளதால் )
குழந்தைகள் RTE ACT அடிப்படையில் அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் TNTET கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
இது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு 2019 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.
RTE ACT புரிதல் இல்லாமல் கடந்த 8 வருடங்களாக தான்தோன்றித் தனமாக செயல்பட்டுவரும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் , ஒவ்வொரு கல்வி மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு முடிவுகள் எடுத்து ஆசிரியர் பணி நியமனங்கள், மற்றும் RTE act பற்றிய புரிதல் இல்லாமல் பதவி உயர்வு போன்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு அனுமதி அளித்துவிட்டனர்.
இந்த நிகழ்வுகள் அதிகமாக அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் அதிகம் நடைபெற்றது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
அதில் TET வருடத்திற்கு இரண்டு வீதம் இதுவரை 16 TETகள் நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் 4 முறை மட்டுமே நடந்து உள்ளது.
RTE ACT 2009 அடிப்படையில் நடைபெற வேண்டிய முறையான ஆசிரியர் நியமனங்கள் , TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுடனோ அல்லது நிபந்தனைகள் குறிப்பிடாமலோ பதவி உயர்வு பெற்றவர்கள் யாராயினும் 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் அல்லது பதவி உயர்வு பெற்று இருப்பின் அடுத்து வரும் TNTET தேர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொண்டு ஏற்கனவே உள்ள பணியை தக்கவைத்துக்
கொள்ளுங்கள்.
அரசு கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் இந்த புரிதலை முறையாக கொண்டு சேர்க்க தமிழக அரசு முன் வர வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சம்மந்தமான ஒரு நல்ல தீர்வும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்.
( 23/08/2010க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட ஆசிரியர் பணியிட நிரப்புதல் செயல்பாடுகள் நடைபெற்று இருந்தால் மட்டுமே TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது )
தற்போது சென்னை HIGH COURT உத்தரவு அமல்படுத்த கல்வி துறை அரசு உதவி பெறும் பள்ளிகளைை மட்டுமே குறி வைத்து உள்ளது முரண்பாடு. ஆனால் RTE சட்டம் அனைவருக்கும் சமம்.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook