குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகளில் தோல்வியுற்ற, 1,990 பேர்; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், 38; தனியார் சுயநிதி பள்ளிகளில், 344; அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 4,786; சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் உள்ள, எட்டு பேர்; அரசு பள்ளிகளில், 29 ஆயிரத்து, 391 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.கோரிக்கைஇவர்கள் அனைவரும், பிளஸ் 2வில் தொடர்ந்து படிக்க முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் விதிகளின் படி, பிளஸ் 1 தேர்ச்சி பெறாவிட்டாலும், பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பை தொடரலாம். இருப்பினும், 2018ல், இது போன்று தோல்வி அடைந்த மாணவர்களில், 30 ஆயிரம் பேர் வரை, கட்டாய மாற்று சான்றிதழ் கொடுத்து, வெளியே அனுப்பப்பட்டனர்.
எனவே, இந்த ஆண்டு, அது போன்று நடக்காமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தேர்வுத் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் ஆய்வு செய்து, மாணவர்களின் தொடர் படிப்புக்கு இடையூறு இல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment