கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான 576 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் வெற்றிபெற்ற 80 பேர் தங்களுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டில் பணி வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திலும், சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பத்திலும் தமிழ் வழியில் படித்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தவர்களுக்கு மட்டும், 20% இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார். மேலும் அவ்வாறு குறிப்பிடாதவர்களுக்கு இந்த இடஒதுக்க்கீட்டில் பணி வழங்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment