பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள் : 49
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Drugs Inspector - 40
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,19,500
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Junior Analyst in the Drugs Testing Laboratory - 09
சம்பளம்: மாதம் ரூ. 36,400 - 1,15,700
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசுவிதிகள்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கேவை, திச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2019 2019
No comments:
Post a Comment