தமிழக அரசு துறைகளில், துணை கலெக்டர், 27; டி.எஸ்.பி., 90; வணிக வரி உதவி கமிஷனர், 18; கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 13; பதிவு துறை துணை பதிவாளர், 7.மேலும், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குனர், 15; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, 8; தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி, 3 என, மொத்தம், 181 இடங்கள் காலியாக உள்ளன.
குரூப் - 1 பிரிவில் அடங்கிய, இந்த பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஜன., 3ல் வெளியிட்டது. இந்த நியமனங்களுக்கு, முதல் நிலை தகுதி தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு என, மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்படும்.இவற்றில், முதல் நிலை தகுதி தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும், 773 மையங்களில் நடந்த தேர்வை, 2.29 லட்சம் பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில், ஒவ்வொரு மையத்திற்கும், தனித்தனியாக கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, அனைத்து மையங்களிலும், வீடியோ கேமராக்கள் வழியே, தேர்வு பணிகள் பதிவு செய்யப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் தலைமையில், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment