தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக,மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்,தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.
இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம்,தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள்பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.
அவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், இருந்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
Thanks...
ReplyDeleteVisual Communication Course Fees Details in Chennai
Fashion Design Institute in Chennai
Hotel Management Course Syllabus
Visual Communication Job Oppertunities in Chennai
Fashion Design Course Fee in Chennai