எந்தப் போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெல்சன் பிரபாகரன் என்பவர் 2013ம் ஆண்டு ஐஐடி பிரதான தேர்வு எழுதினார். அப்போது, மொத்தம் 72 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், அவருக்கு நெகட்டிவ் மதிப்பெண் என்ற அடிப்படை 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டது. அதனால், 47 மதிப்பெண்கள் மட்டும் அவர் பெற்றார். அட்வாஸ் தேர்வுக்கு நுழைய 50 மதிப்பெண்கள் தேவைப்பட்ட நிலையில், மதிப்பெண் குறைவாக உள்ளதாக கூறி அவர் நிராகரிக்கப்படுகிறார்.
இதனையடுத்து, நெகட்டிவ் மதிப்பெண்ணால், ஐஐடி அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி நெல்சன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலுள்ள தேர்வுகளில் கூட நெகட்டிவ் மார்க் இல்லை என்று தம்முடைய மனுதாரர் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது அவரது விடைத்தாளை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், விடைத்தாளை ஆய்வு செய்த நீதிபதிகள் அதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், எந்தப் போட்டி தேர்விலும் நெகட்டிவ் மார்க் கணக்கிடக்கூடாது என்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment