திருக்குறள்:65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம்மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
பழமொழி :
Charity begins at home
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
பொன்மொழி:
உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்குஉன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்கபெரும் பேறு.
- ஜேம்ஸ் டக்ஸில்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம்தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
2.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சென்னை
நீதிக்கதை
அதிசயக்குதிரை
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று.குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாதகாலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனைசொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்குஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப்பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல்தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்துவைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான்.அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கெனவாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும்போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாகஇருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு
கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காணஅனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்குவரவழைத்தார் மன்னர்.
அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டனமன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிகதிருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டுவரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரைமிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்கமுடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான்.
“குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம்கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர்குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும்அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரைஅது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக்கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோமுயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்திமன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக்குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்குவிரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கிஇருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின்குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூடசக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன்காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப்
படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது.நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதிஅதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர்தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
இன்றைய செய்தி துளிகள்:
1.் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில்அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
2.கற்றல் குறைபாடுடைய மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளியில்இருந்து வெளியேற்றக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
3.கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: இதுவரை 456 பேர்பாதிப்பு
4.நதிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய சட்டம்.. முதலமைச்சர்கள் அடங்கியகுழுக்களை அமைக்க மத்திய அரசு திட்டம்
5.மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுதொடரை வென்றது இந்திய அணி
No comments:
Post a Comment