
டில்லி: அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நவம்பர் 1ந்தேதி முதல் தொடங்குவதாக தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த தேர்வுக்கு ஆதார் எண் தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளது.
உயர்கல்விகளை படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதன்படி, இந்த தேசிய தேர்வுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் இதுவரை நடத்தி வந்தது. தற்போது, 2019ம் ஆண்டு முதல் இதுபோன்ற தேர்வுகளை தேசிய தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு நடத்தும் என மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் நீட் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க என்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, 2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் 2019 மே 5-ம் தேதி தொடங்குகின்றன. இதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட் தேர்வானது ஏற்கனவே நடைபெற்று வந்ததை போலவே பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெறும் என்றும், இதற்கான விண்ணப்ப பதிவுக்கு ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை தேவைப்படின் கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment