பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:06.07.2018

திருக்குறள் :
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
உரை:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
பழமொழி :
The face is the index of the mind
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
பொன்மொழி:
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
-விவேகானந்தர்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12,500
2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
1886.
நீதிக்கதை :
நாய்க்குட்டி சொன்ன நீதி
————————————————–
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.
திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.
நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.
இன்றைய செய்தி துளிகள் :
1. பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம்
2.டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகள் தனியாரிடம் ஒப்படைப்பு
3.ஒரே நாளில் ஆறு சட்டங்கள் நிறைவேற்றம்
4.ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!
5.இன்று 2வது டி20 போட்டி: இந்தியா- இங்கிலாந்து மோதல் - தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.
No comments:
Post a Comment