Pages

Friday, March 30, 2018

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிறது

மதுரை ''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு ஏமாற்றுகிறது,'' என, மதுரையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அவரது வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு, அதை செயல்படுத்த மறுக்கிறது. உயர்நீதிமன்றத்தில் கடந்த நவ., 23 ல் தெரிவித்ததற்கு மாறாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியை நீடித்து வருகிறது. 21 மாத நிலுவை தொகையை வழங்கவில்லை. சம்பளக்குழு முரண்பாடுகளை களைய அரசு ஆர்வம் காட்டவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவில்லை. இக்கோரிக்கையை நிறைவேற்ற சென்னையில், மே 8 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் இன்று (மார்ச் 31) உயர்மட்ட குழு இதில் முடிவு செய்கிறது, என்றார்.

No comments:

Post a Comment