Pages

Friday, March 30, 2018

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Image result for sarva shiksha abhiyan

மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. 




 அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment