கோபி: ''அரசுப் பள்ளிகளில், அரசு ஊழியர் குழந்தைகளை சேர்க்கும் நிலை உருவாகும்,'' என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களில் ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை சரி செய்ய குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 'நீட்' தேர்வை பொறுத்தவரை தமிழக அரசின்நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 'நீட்' தேர்வில் தமிழக மாணவருக்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. அவர்களே முன்வந்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் நிலை உருவாகும். ஆங்கில வழி நடக்கும் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சந்திக்கும் வகையில் 54 ஆயிரம் வினாக்கள் கொண்ட புத்தகத்தை அரசு வெளியிட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment