தமிழகத்தில் 2007க்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில் இதற்கான விண்ணப்பங்களை ஆன் லைன் முறையில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விதிமீறல் கட்டட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் 2006ல் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த விரும்பாத தமிழக அரசு 2007 ஜூலைக்கு முன்
கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரமுறைப்படுத்த திட்டமிட்டது. இதற்காக நகரமைப்பு சட்டத்தில் 113 - சி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த பரிந்துரைகளின்படி கட்டட வரன்முறை திட்டத்தை தமிழக அரசு, ஜூன் 22ல் அறிவித்ததுஇதன்படி அரசாணை அமலுக்கு வந்ததில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வரன்முறைக்கு கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் அந்த கட்டடங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான இணைப்புகள் துண்டிக்கப்படும். விற்பனை பதிவு தடை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பு வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதில் விண்ணப்ப பதிவு பணிகள் துவங்கவில்லை. இதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்
பட்டாலும் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துாங்கி வழியும் சி.எம்.டி.ஏ., : இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டட வரன்முறை தொடர்பான விவகாரங்களில் அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்படும். இதன்படி புதிய இணையதளத்தை உருவாக்கும் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால் முறையான
திட்டமிடல் இல்லாததால் இப்பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது.குறிப்பாக உறுப்பினர் செயலர் இல்லாததால், ஒவ்வொரு பணிக்கும் தலைமை செயலகம் சென்று துறை செயலரின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.இத்திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பங்களை எப்படி ஆய்வு செய்வது போன்ற விவகாரங்களில் குழப்பம் நிலவுகிறது. இதனால், இத்திட்டம் நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment