விருதுநகர் மாவட்டம், நரிக்குடி கட்டானூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதைச் சுற்றியுள்ள நாலூர், கடுக்காய்குளம், சீனிமடை, உளுத்திமடை, செங்கமடை, புதையனேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.
காலை பள்ளி செல்ல மற்றும் மாலை வீட்டுக்கு வர போதுமான பஸ் வசதி செய்யப்படவில்லை. இதனால், மாணவர்கள் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்தில் வர வேண்டிய நிலை உள்ளது.
கட்டானூரில் படித்து வரும் பெரும்பாலான மாணவ- மாணவிகள் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையின் இரு புறமும் அடர்ந்த கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், சிறுமிகள் பயத்துடன் பள்ளி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு காலை 10 மணிக்கு அரசு பஸ் வருவதால் எந்தப் பயனும் இல்லை. பள்ளி நேரத்துக்கு அரசு பஸ் வருமா என்ற எதிர்பார்ப்பில் அந்தப் பிஞ்சுக் கால்கள் வருந்த தினமும் புத்தகப்பையை சுமந்தபடி நடக்கின்றனர். அரசு கண்டுகொள்ளுமா?
No comments:
Post a Comment