ஈரோடு:'அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், தொழிற்கல்வி பாடப்பிரிவை துவக்க வேண்டும்' என்று, தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தர ஊதியம், 5,400 ரூபாய், பகுதி நேர பணி காலத்தில், 50 சதவீத ஓய்வூதியத்துக்கு எடுத்து கொள்ள பெறப்பட்ட நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும்.
அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாட பிரிவு துவங்க வேண்டும். தொழிற்கல்வி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. புத்தகம் தயாரிக்கும்போது, சர்வதேச அளவிலான போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொது செயலாளர் நேரு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment