அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
ஆசிரியரின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பெற்றோர்கள் ஏன் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்றும், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்றும் வினா எழுப்பினார்.
உரிய நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கேட்ட நீதிபதி, கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி சமமாக இருக்காது என்றும், ஆசிரியர்கள் கடமைகளை செய்யாவிடில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், கிராமம், மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வேதனை தெரிவித்தாார்.
2012-ம் ஆண்டுக்குப் பின், எத்தனை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது என்று வினா எழுப்பிய நீதிபதி கிருபாகரன், ஆங்கில வழிக்கல்வி எனில், தமிழில் வகுப்பு எடுப்பவர்கள் ஆங்கிலத்தில் எடுப்பார்களா என்றும், 2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்வழி பாடம் நடத்தும் ஆசிரியரே ஆங்கில வழி பாடத்தையும் நடத்துகிறார்களா என்றும், ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என்றும் வினா எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக 2 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
6 subject oru aasiriyare teach panninal 11 bot zoo bio 12 bot zoo bio aasiriyargal pilakalin studies yennavathu
ReplyDelete