கோவை: மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் பற்றாக்குறையால், கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்து வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள, 22 அரசு மருத்துவக்கல்லுாரிகளில் இளநிலை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன், 27 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தனியார் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான, விண்ணப்பங்களும், அரசு மருத்துவக்கல்லுாரியில் வழங்கப்படுகின்றன.
நேற்று அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்கள், 500 மட்டுமே வந்தன. அதனால், அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்து
காத்திருந்தவர்களுக்கு வழங்கினர்.
இந்த விண்ணப்பம் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. வெளியூரில் இருந்து வந்த பலர் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர்.
கோவை மருத்துவக்கல்லுாரி டீன் அசோகன் கூறுகையில், ''விண்ணப்பங்கள் சென்னையில் இருந்து அச்சாகி வருகிறது. வரும் விண்ணப்பங்களை உடனுக்கு உடன் வழங்கி வருகிறோம். நேற்று அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்கள் வரவில்லை. அதனால், இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து, 200 விண்ணப்பங்கள் வழங்கினோம். தகவல் குறிப்பேட்டை, 'சிடி'யில் காப்பி செய்து கொடுத்து இருக்கிறோம். எல்லோருக்கும் விண்ணப்பங்கள் கிடைக்கும். அதனால், மாணவர்கள் அவசரப்பட வேண்டாம்,'' என்றார்.
No comments:
Post a Comment