சென்னை: கடந்த வாரத்தில் இருந்து, சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. அதையொட்டி தலைமைச் செயலகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை, அரசு கலைக் கல்லுாரிகளில், கணினி திட்ட பயிற்சியாளர்களாகப் பணிபுரிவோர் இருவர் இருவராக, தலைமைச் செயலகம் உள்ளே வந்தனர்.
மதியம், 12:00 மணிக்கு, அனைவரும் ஒன்றாக சேர்ந்து, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 32 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment