சென்னை:தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், ஒரு வார கால சிறப்பு கடன் திட்ட முகாமை நடத்துகிறது. இதில், தொழில் துவங்க, 30 கோடி ரூபாய் வரை, கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், சென்னை கிளை சார்பில், தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் துவங்குவோரை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு கடன் திட்ட முகாம், சென்னை, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மெயின் ரோடு, கோ-ஆப் தொழிற்பேட்டை, எப்-1வணிக வளாகம், முதல் தளத்தில், நாளை நடைபெற உள்ளது. அத்துடன், இச்சிறப்பு கடன் திட்ட முகாம், வரும், 23ம் தேதி வரை, சென்னை, நந்தனம், அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திலும் நடக்கிறது.
இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் உதவி பொது மேலாளர் சசிகலா, மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். உற்பத்தி மற்றும் சேவை துறைகளில், புதிய தொழிற்சாலைகள் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும், தனி நிறுவனங்களுக்கு, 15 கோடி ரூபாய் வரையிலும், கூட்டு நிறுவனங்களுக்கு, 30 கோடி ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட உள்ளது.
வாகன கடன், காற்றாலை மின்சார உற்பத்தி செய்வதற்கான கடன், பண்டக சாலை மற்றும் சரக்கு சேமித்து வைக்கும் கிடங்கு கட்டுவதற்கு கடன், கல்யாண மண்டபம், சமூகக் கூடம் மற்றும் சமுதாய மையம் கட்டுவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 94450 23497, 94450 23488 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment