சென்னை: பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள், நேற்று வெளியாகின.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் முடிவுகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,
நேற்று மாலை வெளியாகின. மதிப்பெண் மாறியவர்களின் பதிவெண்கள் மட்டும், இதில் இடம் பெற்றன. மதிப்பெண் மாறியவர்கள், தங்களின் தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம். பதிவெண் பட்டியலில் இல்லாத எண்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment