தமிழ்நாட்டில் 37 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியிடங்களாக இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்து உள்ளது.
பொறியியல் பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்கு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓய்வுபெறும் வயது 58 என்பதால் விண்ணப்பிப்பதற்கு 57 வயது நிர்ணயித்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 07.07.2017. எழுத்துத்தேர்வு 13.08.2017 அன்று நடைபெறும். பட்டியல் வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. இதர பிரிவினருக்கு கட்டணம் ரூ. 600. ஆன்லைன் வழியாக கட்டணத்தைச் செலுத்தலாம்.
இந்தத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு பிரிவினருக்கான ஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு, தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிக்கான ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பணி நிரப்பப்படும் என்றும் அறிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.
இந்த விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான இணையதள முகவரி https://trbonlineexams.in/polytechnic/
No comments:
Post a Comment