மதுரை;மதுரை மாவட்டத்தில் இன்று (ஜூன் 18 ) நடக்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய(யு.பி.எஸ்.சி.,) குரூப் 1 முதன்மை தேர்வை 28 மையங்களில் 8304 பேர் எழுதுகின்றனர்.
இத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. பூம்புகார் கப்பல் கழக நிர்வாக இயக்குனர் ராஜேந்திரரத்னு, சுற்றுலாத்துறை கமிஷனர் பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், தேர்வாணைய சார்பு செயலர் ஹர்பிரீத் சிங், டி.ஆர்.ஓ., குணாளன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் கூறியதாவது: குரூப் 1 முதன்மை தேர்வை 8304 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 20 பேர் பார்வை குறைபாடு உடையவர்கள். தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் நிலையில் 8 நடமாடும் ஒருங்கிணைப்பாளர்கள், 28 தேர்வு மேற்பார்வையாளர்கள், 28 துணை மேற்பார்வையாளர்கள், 720 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வின் போது அலைபேசி, கால்குலேட்டர், புளுடூத் போன்ற தொழில் நுட்ப சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வர்கள் போலீசாரின் சோதனைக்கு பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் காலை 8:30 மணி, மதியம் 1:30 மணிக்குள் மையத்திற்குள் இருக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment