கரூர்:அரசுப்பள்ளி ஆய்வு கூடத்தில், டீ என நினைத்து, ஆசிட் குடித்த மாணவனின் உணவு குழாய் வெந்ததால், மேல் சிகிச்சைக்கு பணமின்றி பெற்றோர் தவிக்கின்றனர். கரூர் மாவட்டம், புனவாசிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இளங்கோவன் மகன் கோகுல், 14; புனவாசிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில்,
ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், கடந்த, அக்., 10ல், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், டம்ளரில் இருந்த ஆசிட்டை, டீ என நினைத்து, தவறுதலாக குடித்து விட்டார். சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு, கரூர் கலெக்டர் கோவிந்தராஜிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பது: எங்கள் மகன் ஆசிட் குடித்த விபரத்தை, ஆசிரியர்கள் மறைத்து விட்டனர். சம்பவம் நடந்த இரவு, கோகுல் வலியால் துடித்தபோது, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.'ஸ்கேன்' செய்து பார்த்தபோது, உணவு குழாய் வெந்து இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, சிகிச்சை அளித்த வகையில், 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்டோம். மீண்டும், உடல் நிலை பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகிறோம். எங்களுக்கு, அரசின் சார்பில் நிதி உதவி செய்ய வேண்டும். உதவ விரும்புவோர், 73733 - 88241 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment