புதுச்சேரி: கடந்தாண்டு ஜூன் மாதம் துவக்க கல்வி பட்டய தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் மறு கூட்டல், ஸ்கேன் காப்பி பெற விண்ணப்பிக்கலாம்.இது குறித்து லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய இயக்குனர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்தாண்டு ஜூன் மாதம் தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாளின் ஒளிநகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் ஒளிநகல், மறுகூட்டல் செய்வதற்கான விண்ணப்ப படிவம் www.tndge.in என்ற இணையதளத்தில் டவுண்லோடு செய்து கொண்டு, அதனை பூர்த்தி செய்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் செலுத்தி, ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.நாளைக்குள் (8ம்தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் ஆன்-லைன் கட்டணமாக செலுத்த வேண்டும்.விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.206, ஆன்-லைன் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment