புதுச்சேரி : புதுச்சேரி அரசு பொது பிரிவு குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்விற்கான பொதுக் குழு கூட்டம் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன் , தலைவர் சீத்தராமன், பொதுச் செயலாளர் பிரேமதாசன், துணை பொதுச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரி அரசு பொது பிரிவு குரூப்'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் சங்கத் தலைவராக அருள்தாஸ், பொது செயலாளர் ராஜா, பொருளாளர் அங்காளன், துணை தலைவர்கள் செல்வகுமார், ஏகநாதன், அமைப்பு செயலாளர் அய்யனார், இணை செயலாளர் முத்துமாரி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.காலியாக உள்ள கீழ்நிலை எழுத்தர் பதவிகளை தகுதியான எம்.டி.எஸ்., ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
2004 ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment