'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' என்ற, சி.ஏ., இடைநிலை தேர்வில், சென்னை மாணவர் ஷிவ் கிரீஷ், தேசிய அளவில், மூன்றாம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., சார்பில், சி.ஏ., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தகுதி நிலைக்கான, சி.பி.டி., தேர்வு, ஜூன், டிச., மாதங்களிலும், இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகள், மே மற்றும் நவம்பரிலும் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, இறுதி தேர்வில், தமிழக மாணவர்கள், தேசிய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்தனர். இந்த ஆண்டு நவம்பரில் நடந்த இடைநிலை தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. அதில், சென்னை மாணவர் ஷிவ் கிரீஷ், முதல் முயற்சியிலேயே, அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், 700க்கு, 545 மதிப்பெண் பெற்றுள்ளார்.வடபழனியைச் சேர்ந்த ஷிவ் கிரீஷ், 2013ல், கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும், 2015ல், பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில், பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். பிளஸ் 2க்கு பின், தி.நகரிலுள்ள கே.எஸ்.அகாடமியில், சி.ஏ., தேர்வு பயிற்சி பெற்றார். இவரது தந்தை விஸ்வநாதன், ஆடிட்டர். ரேங்க் பெற்றது குறித்து, ஷிவ் கிரீஷ் கூறுகையில், ''பயிற்சி மையத்தின் வகுப்புகள் போக, மற்ற நேரங்களில், ஆடிட்டரான என் தந்தை, அதிக பயிற்சிகள் அளித்தார். அதனால், தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி, தேசிய அளவில், 'ரேங்க்' பெற முடிந்தது,'' என்றார்.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த ரேகா கேவ்ரம்சுதர், 700க்கு, 559 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடமும், கோல்கட்டாவின் ஆயுஷ் அகர்வால், 553 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி எவ்வளவு? : ஒருங்கிணைந்த இடைநிலை சி.ஏ., தேர்வில், 69 ஆயிரத்து, 653 பேர், முதல் பிரிவில் பங்கேற்று, 13 ஆயிரத்து, 424 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் பிரிவில், 62 ஆயிரத்து, 123 பேர் பங்கேற்று, 18 ஆயிரத்து, 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏதாவது ஒரு பிரிவு அல்லது இரண்டு பிரிவிலும் சேர்த்து, 47 ஆயிரத்து, 766 பேர் தேர்வு எழுதியதில், 15 ஆயிரத்து, 543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 32.53 சதவீதமாகும். இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தோர், மே மாதம் நடக்கும், இறுதி தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment