நீட் தேர்வு குறித்த குழப்பங்களுக்கு, இந்நிகழ்ச்சியால் தெளிவு கிடைத்துள்ளது. தேர்வு மையத்தில் பின்பற்றப்படும், ஆடை, ஆபரண கட்டுப்பாடுகளை தெரிந்து கொண்டோம். தேர்வு மையத்திற்கு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்பது, இந்நிகழ்ச்சிக்கு வந்த பிறகே தெரியும்.எம்.ஹேமந்த்ஸ் சாய் கிருஷ்ணா, சின்மயா வித்யாலயா பள்ளி, கீழ்பாக்கம்
பொது தேர்வுக்கு தயாராவது, பயிற்சி பெறுவது மற்றும் விடைஅளிக்கும் முறைகள் குறித்தும், தேவையான ஆலோசனைகள் கிடைத்தன. எஸ்.ரோபதிபட்டு, எஸ்.ஆர்.என்.எம்., மெட்ரிக் பள்ளி, நந்தம்பாக்கம்.
சி.பி.எஸ்.இ., உட்பட மற்ற பாட திட்டங்களில் இருந்தும், 'நீட்' தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களின் படிப்புக்கு தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும் என, தெரிந்து கொண்டேன். எல்.பகவத்சிங், விவேகானந்தா வித்யாலயா, திருவொற்றியூர்.
மாணவர்களின் கேள்வி - பதில் நேரம், அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. 'நீட்' குறித்து முழு தகவல்களும், இந்நிகழ்ச்சியில் கிடைத்தன. வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த, தினமலருக்கு நன்றி.இ.நந்தினி, பிரசிடென்சி பெண்கள் மேல்நிலை பள்ளி, எழும்பூர்
எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், 'நீட்' நுழைவுத் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment