சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க, மாநில தேர்தல் கமிஷனில், 24 மணி நேர புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு: உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாக நடக்க, இந்த தேர்தல், முன் மாதிரியாக இருக்கும் வகையில், மாநில தேர்தல் கமிஷன், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் குறித்து புகார்களை பெற
வசதியாக, 24 மணி நேர புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 1800 4257072, 1800 425 7073, 1800 425 7074என்ற, மூன்று கட்டணமில்லாத தொலை பேசிகள் நிறுவப்பட்டுள்ளன; பொதுமக்கள் இந்த எண்களில், புகார்களை பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment