Pages

Thursday, August 11, 2016

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு

ராமநாதபுரம்: ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல் எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment