Pages

Saturday, July 16, 2016

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: 'ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான, 14 காலியிடங்களுக்கு மார்ச், 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது; 675 பேர் பங்கேற்றனர். இவர்களில் தகுதி பெற்ற தேர்வர்களில், 14 பேர் நேர்காணலுக்கு முந்தைய, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான பட்டியல் தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஆக., 1ம் தேதி நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment