சென்னை: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் அதைச் சார்ந்த சங்கங்களின், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் கவுரவ தலைவர் போஸ் கூறியதாவது: பல பெயர்களில் செயல்பட்டு வரும் சங்கங்கள்,
'தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்' என்ற பெயரில், ஒருங்கிணைந்து செயல்படுவது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக, வி.ஏ.ஓ.,க் களை நியமிக்கும் முன், ஏற்கனவே பணியாற்றுவோருக்கு, மாவட்ட அளவில் இடமாறுதலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இணையதள செலவுகளுக்காக, வி.ஏ.ஓ.,க்களுக்கு, 1,000 ரூபாய் படி வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையை, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment